
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேமுதிக கட்சி தொடங்கி 18 ஆண்டுகள் முடிவடைந்து 19ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சாதி, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக ஒரே குலம் ஒரே இனம் என்ற கோட்பாடோடு சனாதனத்தை கடைபிடிக்கும் கட்சியாக தேமுதிக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதே பாணியில் தான் எப்போதும் செயல்படும். இன்றைக்கு கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை யாரிடமும் பணத்தை வசூல் செய்யாமல், சொந்த உழைப்பில் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை கொண்டு தான் கட்சியை வளர்த்து வருகிறோம். இதற்கு நமக்கு கிடைத்த கட்சியின் நரம்புகளாகவும், ரத்த நாளங்களாகவும் செயல்படும் தொண்டர்கள் தான் காரணம். தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வரும் 2024 நடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பலத்தை நாம் அனைவரும் நிச்சயமாக நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பலத்தை காட்டுவோம் appeared first on Dinakaran.