×

அரசு விரைவு பஸ் கவிழ்ந்து விபத்து: 41 பயணிகள் தப்பினர்

திண்டிவனம்: மதுரையில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் நேற்று அதிகாலை சென்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த பாம்பு விழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன் (42) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக காஞ்சிபுரம் மாவட்டம் இடையன்புதூர் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (37) சென்றுள்ளார்.

41 பயணிகளுடன் பஸ், திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடத்தில் அதிகாலை 4.30 மணி அளவில் வந்தபோது பின்னால் வந்த லாரி உரசியபடி சென்றது. உடனே டிரைவர் பஸ்சை இடதுபுறம் திருப்பி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 2 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. 41 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

The post அரசு விரைவு பஸ் கவிழ்ந்து விபத்து: 41 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chennai ,Ramanathapuram district ,Paramakkudy ,Dinakaran ,
× RELATED அபகரிப்பதும் திருட்டுதான் அரசு...