×

ஜி-20 மாநாட்டின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 450 போலீசாருக்கு பிரதமர் விருந்து

புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாடு கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடந்தது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருந்தது. 50,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மோப்ப நாய் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், தனிப்பட்ட சிரமங்கள், குடும்பப் பிரச்னைகளுக்கு மத்தியில் தங்கள் கடமையை செய்த காவலர்களை பாராட்டும் விதமாக, கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் பதவி வரையிலான 450 காவலர்களுக்கு பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை இரவு உணவு விருந்து அளிக்க உள்ளார். ஒவ்வொரு குழுக்களில் இருந்து தலா ஐந்து முதல் ஆறு பேரை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஜி-20 மாநாட்டின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 450 போலீசாருக்கு பிரதமர் விருந்து appeared first on Dinakaran.

Tags : G-20 summit ,New Delhi ,G20 Summit ,Delhi ,G-20 ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...