×

ஐசிசி உலக கோப்பை ஆப்கானிஸ்தான் அணியில் நவீன் உல் ஹக்

காபூல்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில், வேகப் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான ஆப்கான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹஷ்மதுல்லா ஷாகிதி தலைமையிலான அணியில் மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரியில், ஒருநாள் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த வேகப் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலக கோப்பையில் களமிறங்க உள்ளார்.

பஸல்லாக் பரூக்கி, அப்துல் ரகுமான், ஆல் ரவுண்டர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய், நவீன் ஆகியோர் வேகப் பந்துவீச்சு கூட்டணிக்கு பொறுப்பேற்கின்றனர். ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரகுமான், நூர் அகமது என சுழல் கூட்டணியும் வலுவாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அக். 7ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது (தர்மசாலா). ஆப்கானிஸ்தான்: ஹஸ்மதுல்லா ஷாகிதி (கேப்டன்), இப்ராகிம் ஸத்ரன், ரகமதுல்லா குர்பாஸ், ரகமத் ஷா, ரியாஸ் ஹாசன், நஜிபுல்லா ஸத்ரன், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், ரஷித் கான், அப்துல் ரகுமான், நூர் அகமது, முஜீப் உர் ரகுமான், பஸல்லாக் பரூக்கி, நவீன் உல் ஹக்: ரிசர்வ் வீரர்கள்: குல்பாதின் நயிப், ஷராபுதின் அஷ்ரப், பரீத் அகமது.

The post ஐசிசி உலக கோப்பை ஆப்கானிஸ்தான் அணியில் நவீன் உல் ஹக் appeared first on Dinakaran.

Tags : Naveen-ul-Haq ,Afghanistan ,ICC World Cup ,Kabul ,Naveen ul Haq ,ICC World Cup ODI ,Dinakaran ,
× RELATED ரசிகர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு;...