×

ரஷ்ய அதிபர் புடினுடன், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு

சியோல்: ரஷ்ய அதிபர் புடினை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யாவின் புனித போருக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக கிம் ஜோங் தெரிவித்தார். வட கொரியா அதிபர் கிம் ஜோங் கடந்த ஞாயிறன்று பாதுகாப்பு கவசங்களுடன் கூடிய சொகுசு ரயிலில் பியாங்யாங்கில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டார். அவருடன் வெளியுறவு அமைச்சர் சோ சுன் ஹூய் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் சென்றனர். நேற்றுமுன்தினம் ரயில் ரஷ்யாவுக்குள் வந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள முக்கிய ராக்கெட் ஏவுதளமான வோஸ்டோச்னியில் அதிபர் புடினை, கிம் ஜோங் நேற்று சந்தித்து பேசினார். உளவு செயற்கை கோள் மற்றும் அணு ஆயுத ஏவுகணைகள் கொண்ட நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்ப உதவிகளை ரஷ்யாவிடம் வட கொரியா கேட்கும் என கூறப்படுகிறது. வட கொரியாவிடம் இருந்து பல்வேறு ஆயுதங்களை வாங்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின்படி வட கொரியாவுடன் சட்ட விரோத ஆயுத ஒப்பந்தம் செய்தால் அது சர்வதேச தடைக்கு வழிவகுக்கும்.

The post ரஷ்ய அதிபர் புடினுடன், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : President ,Kim Jong Un ,Putin ,Seoul ,Russia ,Korean ,Dinakaran ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...