×

ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.2.50 கோடி பணம் பறிமுதல்

புதுடெல்லி: வட கிழக்கு ரயில்வேயில் தலைமை மேலாளர்(பொருட்கள்) ஆக பணிபுரிபவர் கே.சி.ஜோஷி. ரயில்வேக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 3 லாரிகளை வாடகைக்கு விடுவதற்காக ரூ.7 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் ஜோஷி கேட்டுள்ளார். இதுகுறித்து ஒப்பந்ததாரர் சிபிஐயிடம் புகார் அளித்தார்.

நேற்றுமுன்தினம் ஒப்பந்ததாரரிடம் ரூ.3 லட்சம் வாங்கிய போது ஜோஷியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், கோரக்பூர்,நொய்டா நகரங்களில் ஜோஷியின் வீடுகளில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் ரூ.2.61 கோடி பணம் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.2.50 கோடி பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Railway ,New Delhi ,K.K. ,North Eastern Railways ,RC ,Joshi ,Railways ,
× RELATED புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது...