×

திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் வசீகரிக்கும் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வரையாடுகளின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள வனவிரிவாக்க மைய அலுவலகத்தில் வரையாடுகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில், தமிழகத்தில் உள்ள வரையாடுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. மேலும், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் எவ்வாறு கணக்கெடுப்பது என்பது குறித்து விரிவான தகவல்கள் இந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டன.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோட்டமலை, பேய்மலை, மொட்டை பத்தாம் நம்பர் பீட், தொப்பி தூக்கும் பாறை, பெருமாள் மொட்டை, திருவிக்கல் மொட்டை, ராவுத்தர் கடைப்பகுதி, பூபூத்து உள்ளிட்ட இடங்களில் வரையாடுகள் வசித்து வருகின்றன. இந்த இடங்களில் மலை உச்சியில் தான் வரையாடுகள் காணப்படும். திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சுமார் 200 வரையாடுகள் வரை அதிகரித்துள்ளது’ என்றார்.

The post திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் வசீகரிக்கும் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvilliputhur forest ,Tiruvilliputhur ,Western Ghats ,Meghamalai Tiger Reserve ,
× RELATED திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் மலை...