×

பவுஞ்சூர் அருகே 120 ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு சாய்ந்தது: கண்ணீர் விட்டு அழுத மக்கள்

செய்யூர்: பவுஞ்சூர் அருகே 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செய்யூர் அருகே பவுஞ்சூர் அடுத்த வடக்கு வாயலூர் கிராமத்தில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் பலத்த காற்று வீசியபடி கனமழை பெய்து வந்தது. இதனால், வலுவிழந்த அரசமரம் வேரோடு இரண்டாகப் பிளந்துகொண்டு அப்பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. மரம் சாய்ந்து விழுந்த நேரம் அவ்வழியே ஆள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  மரம் சாய்ந்து விழுந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடம் சென்று பல வருடங்களாக மக்களுக்கு நிழலாக இருந்த அம்மரத்தை கண்டு கண்ணீர் மல்க மரத்திற்கு பாலபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அப்பகுதி பெண் ஒருவருக்கு சாமி வந்து ஆடிய நிலையில், ‘விழுந்த அம்மரத்தை கன்னியம்மன் சாமியாக வணங்க வேண்டும்’ என கூறினார். மேலும், பழமையான மரம் சாய்ந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post பவுஞ்சூர் அருகே 120 ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு சாய்ந்தது: கண்ணீர் விட்டு அழுத மக்கள் appeared first on Dinakaran.

Tags : Pounjur ,Seyyur ,Paunjur ,
× RELATED பவுஞ்சூர் – கூவத்தூர் இடையே செல்லும்...