
- காஞ்சிபுரம்
- அமைச்சர்
- தமோ அன்பரசன்
- காஞ்சிராபுரம்
- காஞ்சிராபுரம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு அரசு
காஞ்சிரபுரம்: காஞ்சிரபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் துவக்க விழாவுக்கான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகளை சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். நாளை மறுநாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
இந்த விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக மேடை அமைக்கும் பணிகளும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளை சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டார்.
காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் அமைச்சருடன் சென்று விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏக்கள் சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
The post கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்: காஞ்சிபுரத்தில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்..அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.