×

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

மதுரை: சாத்தான்குளம் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020ல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

இவ்வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டு முருகன், சாமத்துரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ், பிரான்சிஸ், வெயில்முத்து உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என சிபிஐ, அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கினால் தற்போது வேகமாக நடந்து வரும் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆய்வாளர் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். நவம்பர் மாதத்திற்குள் வழக்கு விசாரணை நிறைவடையும் என சிபிஐ தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

The post சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Inspector ,Srither ,Satankulam Guard ,Madurai ,Ikord Madurai ,Sredar ,Jam ,Satankulam ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு