×

தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மூலம் மத மோதலை ஏற்படுத்துவதே மோடி, அமித்ஷாவின் செயல் திட்டம்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபல் பேட்டி

டெல்லி: அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மூலம் மத மோதலை ஏற்படுத்துவதே மோடி, அமித்ஷாவின் செயல் திட்டம் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சனாதன சர்ச்சை குறித்து பதில் சொல்லுமாறு ஏ.என்.ஐ. செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கபில் சிபல் காட்டமான பதிலளித்துள்ளார். பல்லாண்டுகளாக அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் மத மோதல், மதவாத அரசியல் இருந்தது இல்லை. தமிழ்நாட்டில் இருந்து மடாதிபதிகளை உத்தரப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று தமிழ்நாட்டில் விஷ வித்துகளை விதைக்க திட்டமிடுகிறீர்கள்.

தமிழ்நாட்டில் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

மோடி, அமித் ஷா மூலம் அறிய விரும்புவது ஒன்றுதான்; தமிழ்நாட்டில் என்ன திட்டத்தை செயல்படுத்துகிறீர்கள் ?. ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பிரதமருக்கும், அமித் ஷாவுக்கும் தெரியுமா?. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் மூலம் பரப்பப்படும் பாஜகவின் செயல் திட்டம் என்ன?.

“ஆளுநர் மூலம் மத மோதலை உருவாக்குவதே பாஜக திட்டம்

ஆளுநர் ரவி மூலம் தமிழ்நாட்டில் மத மோதல் என்ற விஷ வித்துகளை விதைக்க பாஜக முயற்சிப்பதாக கபில் சிபல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தற்போது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் தமிழ்நாட்டில் அரசாங்கத்தை நடத்துகின்றனர்.

“பாஜகவின் திட்டத்தை ஆளுநர் செயல்படுத்துகிறார்

பாஜகவின் அரசியல் திட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுத்துவதாகவும் கபில் சிபல் கடும் விமர்சனம். தனது அரசியலுக்காக பாஜக தங்கள் கூட்டணியில் உள்ள கட்சியையே அழிக்கப் பார்க்கிறது என்றும் கபில் சிபல் குற்றச்சாட்டு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எல்லாம் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பதில் சொல்ல வேண்டும். ஆளுநரின் வேலை இதுதானா என்பதை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் விளக்க வேண்டும்.

மோடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: கபில் சிபல்

ஆளுநர் அரசியலில் ஈடுபடலாம் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறதா என்றும் கபில் சிபல் கேள்வி எழுப்பினார். ஆளுநர் ஆர்.என்.ரவியை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மதவாத அரசியலை முன்னெடுப்பது தான் ஆளுநரின் வேலையா என்று கபில் சிபல் சரமாரி கேள்வி. தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஆளுநரையும் கண்டித்த பின் சனாதன சர்ச்சை குறித்து பேசலாம். தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களிடமும் மோடியும் அமித் ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாஜகவுக்கு கபில் சிபல் பதிலடி

ஆளுநரின் அத்துமீறிய செயல்பாடுகளுக்கு மோடியும், அமித் ஷாவும் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மோடி, அமித்ஷாவின் அரசியல் திட்டத்தையே தமிழ்நாட்டில் ஆளுநர் முன்னெடுத்துச் செல்வதாக கபில் சிபல் குற்றச்சாட்டு. சனாதன பிரச்சனையை முன்வைத்து இந்தியா கூட்டணியை பாஜக விமர்சித்து வரும் நிலையில் கபில் சிபல் பதிலடி.

ஆட்சியின் தவறை மறைக்க சனாதனத்தை எடுத்துள்ளது பாஜக: பிருந்தா காரத்

ஆட்சியின் தவறுகளை மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே சனாதன பிரச்சனையை பாஜக கையில் எடுத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.ம் பா.ஜ.க.வும் சாதிய கட்டமைப்பில் இரட்டை கொள்கையை கொண்டுள்ளன என பிருந்தா காரத் தெரிவித்தார். இவ்வாறு குறிப்பிட்டார்.

The post தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மூலம் மத மோதலை ஏற்படுத்துவதே மோடி, அமித்ஷாவின் செயல் திட்டம்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபல் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,Amit Shah ,Tamil Nadu ,Governor ,Former Union Minister ,Kapil Sibal ,Delhi ,Governor Ravi ,
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...