×

கோபி அருகே மாநில நெடுஞ்சாலையில் புதியதாக சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மாநில நெடுஞ்சாலையில் புதியதாக சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழித்தடத்தில் சித்தோடு முதல் மேட்டுப்பாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை சுங்கச்சாவடியாக அறிவித்துள்ள நெடுஞ்சாலைத்துறை பாலபாளையம் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியினையும் தொடங்கியுள்ளது.

இங்கு சுங்கச்சாவடி அமைந்தால் சிறு, குறு விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவர் என்றும் சேவை சாலை இல்லாமல் ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்திவிட்டு சுங்கம் வசூலிப்பது சரியான முறையல்ல என்றும் குற்றம்சாட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சித்தோடு, கவுந்தம்பாடி, கோபி, பவானிசாகர், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விலை பொருட்களை இந்த சாலை வழியாக வாகனங்களில் கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். ஈரோடு சக்தி எஸ்ச் 15 சுங்கச்சாலை திட்டத்தையும் பாலபாளையத்தில் அமைக்கப்படும் சுங்கச்சாவடியையும் அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தினர்.

The post கோபி அருகே மாநில நெடுஞ்சாலையில் புதியதாக சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Gobi ,Erode ,Kopisettipalayam ,Erode district ,Dinakaran ,
× RELATED கோபி அருகே கோயில் திருவிழாவில்...