×

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றியது தமிழ்நாடு அரசு. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து, விளையாட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதம் வைத்திருந்தது. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

The post ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED காப்புரிமை ஒப்பந்தம் தொடர்பான வழக்கு:...