×

வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ₹80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ₹80 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது.தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த வாரத்தை விட நேற்று கால்நடைகளின் வரத்து சற்றே குறைந்துள்ளது. ேநற்று மட்டும் 700க்கும் மேற்பட்ட மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்கு வந்தது. இதனால் நேற்று மட்டும் சுமார் ₹80 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ₹80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tamil Nadu ,Veterinary Nadu ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...