தஞ்சாவூர் : தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் குப்பை தொட்டியில் காலாவதியான அரசு டானிக் பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை, ஆர்எம்எஸ் காலனி அருகே குப்பை தொட்டியில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான, 200க்கும் மேற்பட்ட ‘அயர்ன் அண்டு போலிக் ஆசிட் சிரப்’ என்ற டானிக் பாட்டில்கள், சுமார் ஆயிரம் எண்ணிக்கையில் கொட்டப்பட்டுள்ளன. இந்த டானிக் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுவது.
இந்நிலையில் நாஞ்சிக்கோட்டை சாலை குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுள்ள டானிக், காலாவாதியாகி 8 மாதங்களாகிறது. இதை குப்பை கிடங்கில் கொட்டியது யார், காலாவதியாகும் வரை நோயாளிகளுக்கு வழங்காமல் வைத்திருந்தது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். மிகவும் முக்கியமான இந்த டானிக்கை, காலவாதியாகும் முன்னரே வேறு அரசு மருத்துவமனைகளுக்கு கொடுத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
The post தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் குப்பையில் கொட்டப்பட்ட காலாவதியான டானிக் பாட்டில்கள் appeared first on Dinakaran.