
*சிறுவர் ரயில் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சம்
*தஞ்சாவூர் மக்களை மகிழ்விக்க போகிறது
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.8.10 கோடியில் புதுப்பிக்கப்பட்டு அழகு மிளிர்ந்து காட்சியளிக்கும் சிவகங்கை பூங்கா திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. சிறுவர் ரயில் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் தஞ்சாவூர் மக்களை மகிழ்விக்க போகிறது.இதில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. தஞ்சாவூர் என்றால் அனைவலடினட நினைவுக்கு வருவது பெரிய கோயில் தான். தஞ்சாவூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் இக்கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் அதிக எண்ணிக்கையில் தினமும் வந்து செல்கின்றனர்.
தஞ்சாவூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெரிய கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள சிவகங்கை பூங்காவையும் வந்து பார்த்துவிட்டு தான் செல்வார்கள். தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா சுமார் 20 ஏக்கரில் 1871ம் ஆண்டு நகராட்சியால் உருவாக்கப்பட்டது.இந்த பூங்காவின் உள்ளே 10 ஏக்கரில் நீர்வற்றா குளமும் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 10 ஏக்கரில் பூங்காவாக இது அமைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான பசுமையான மரங்கள், புல்வெளி செடிகள், மான்கள், நரி, முள்ளம்பன்றி, சீமை எலி, முயல், பறவைகள், கிளிகள் வளர்க்கப்பட்டு வந்தது. சிறுவர்களுக்கான ரயில், படகு சவாரி, நீச்சல் குளம், நீர் சறுக்கு விளையாட்டுகளும் கொண்டு வரப்பட்டது. இங்கு தினமும் வருபவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரம் பேர் என்றால் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை அப்படியே மூன்று மடங்காக அதிகரித்து விடும்.
இந்த பூங்கா ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏராளமாக மரங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. இவை இன்றும் நிழல் தந்து மக்களை மகிழ்வித்து வருகின்றன. இத்தகைய சிறப்புமிக்க பொழுது போக்கு சுற்றுலாத்தலமாக விளங்கிய சிவகங்கை பூங்காவை மேலும் தரம் உயர்த்த ஏதுவாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் மூலம் பூங்கா முழுவதும் புதிய நடைபாதை, அலங்கார மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள், சேதமடைந்த இடங்களில் சுற்றுச்சுவர்கள் என சிவகங்கை பூங்காவில் பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பதால் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த மான்கள் கோடியக்கரை சரணாலயத்திற்கும், நரிகள், கிளிகள், புணுகு பூனை போன்றவை வண்டலூர் மிருககாட்சி சாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது சிவகங்கை பூங்காவில் சீரமைப்பு பணிகள் வெகு வேகமாக மாநகராட்சி சார்பில் நடந்து வருகிறது. நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. சிறுவர்கள் ரயில் ஓடிய தண்டவாளங்கள் அகற்றப்பட்டுள்ளது. அதில் நடைபாதை அருமையாக கட்டப்பட்டுள்ளது. இதில் டயர் வைத்த சிறுவர்கள் ரயில் இயக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்திலேயே மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்காவில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா தான் மிகப்பெரியதும், பழமையானதுமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சிவகங்கை பூங்காவில் யானைக்கால் மரம் என்ற மரம் 100 வயதை கடந்து இன்றும் கம்பீரமாக நிழல் தந்து கொண்டிருக்கிறது. இந்த மரத்தின் அடிப்பகுதி யானைக்கால் போன்று இருப்பதால் இதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. தன் கிளைகளை விரித்து பெரிய அளவிலான குடை போன்று இந்த மரம் காட்சி அளிக்கிறது.
சிவகங்கை பூங்காவில் உள்ள இந்த பழமையான மரம் பல இயற்கை சீற்றங்களை தாண்டியும் இன்றும் வலிமையாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவில் சிவகங்கை பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
டயரில் ஓடும் சிறுவர் ரயில்
நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. சிறுவர்கள் ரயில் ஓடிய தண்டவாளங்கள் அகற்றப்பட்டுள்ளது. அதில் நடைபாதை அருமையாக கட்டப்பட்டுள்ளது. இதில் டயரில் ஓடும் சிறுவர்கள் ரயில் இயக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
100 வயதை கடந்த யானைக்கால் மரம்
சிவகங்கை பூங்காவில் யானைக்கால் மரம் என்ற மரம் 100 வயதை கடந்து இன்றும் கம்பீரமாக நிழல் தந்து கொண்டிருக்கிறது. இந்த மரத்தின் அடிப்பகுதி யானைக்கால் போன்று இருப்பதால் இதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. தன் கிளைகளை விரித்து பெரிய அளவிலான குடை போன்று இந்த மரம் காட்சி அளிக்கிறது. சிவகங்கை பூங்காவில் உள்ள இந்த பழமையான மரம் பல இயற்கை சீற்றங்களை தாண்டியும் இன்றும் வலிமையாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post ரூ.8.10 கோடியில் புதுப்பிக்கப்பட்டு அழகு மிளிர்ந்து திறப்பு விழாவுக்கு தயாராகிறது சிவகங்கை பூங்கா appeared first on Dinakaran.