×

ஆப்பிள் ஐஃபோன் 15 சீரிஸ் அறிமுகம்: செப்.15ம் தேதி முன்பதிவு தொடக்கம்…ஆரம்ப விலை ரூ.80,000 நிர்ணயம்..!!

சென்னை: ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐஃபோன் 15 மாடல்களில் வழக்கம் போல புதிய அம்சங்களுடன் முதன் முறையாக டைப் சி சார்ஜர் வசதி வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மனம் கவர்ந்த ஆப்பிள் நிறுவனம் தங்கள் தயாரிப்புகளின் புதிய மாடல்களை ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன் படி இந்த ஆண்டு ரூ.80,000 என்ற விலையில் 6.1 அங்குல டிஸ்பிலே கொண்ட ஐஃபோன் 15 மாடலும் ரூ.1,35,000 என்ற விலையில் 6.7 அங்குல டிஸ்பிலே கொண்ட ஐஃபோன் 15 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முன்பதிவு தொடங்க உள்ள நிலையில் வரும் 22ம் தேதி முதல் விற்பனை தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஐஃபோனை வருடாந்தர நிகழ்வில் வைத்து முதல் முறையாக அறிமுகம் செய்துள்ள ஆப்பிள் மற்றும் ஒரு சிறப்பு அம்சமாக தனது தயாரிப்புகளுக்கு டைப் சி சார்ஜிங் வசதியை வழங்கியுள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 சாதனங்களும் வருடாந்தர நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9ல் சிறப்பு அம்சமாக வாட்ச் கட்டப்பட்டிருக்கும் கையின் விரல்களை சொடுக்கினாலே கால்கள் அட்டண்ட் ஆகும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.42,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post ஆப்பிள் ஐஃபோன் 15 சீரிஸ் அறிமுகம்: செப்.15ம் தேதி முன்பதிவு தொடக்கம்…ஆரம்ப விலை ரூ.80,000 நிர்ணயம்..!! appeared first on Dinakaran.

Tags : Apple ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆப்பிள் அல்வா