×

நெல்லையில் ரூ.4,000 கோடியில் சூரிய மின்சக்தி ஆலை: டாடாவின் டி.பி. சோலார் லிமிடெட் நிறுவனம் தொடங்குகிறது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் டாடா குழுமம் சூரிய மின்சக்தி தொழிற்சாலை ஒன்றை தொடங்கவுள்ளது. சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள இந்த சோலார் திட்டத்தால் ரூ.2,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். டாடா பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி. சோலார் லிமிடெட் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக சோலார் செல் மற்றும் மாடியூல் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க இருக்கிறது. இதற்காக டி.எப்.சி. எனப்படும் யூ.எஸ்.இன்டர்நேஷனல் டெவெலப் அன்ட் பைனான்ஸ் கார்பரேஷனிடம் இருந்து டாடா பவர் நிறுவனம் சுமார் ரூ.4,000 கோடி நிதி உதவி பெறவுள்ளது. இந்த சோலார் செல் மற்றும் மாடியூல் உற்பத்தி தொழிற்சாலை 4.3 ஜிகாவாட் மின் தயாரிப்பு திறன் கொண்டதாகும்.

இதன் மூலம் சோலார் செல் மற்றும் மாடியூல் உற்பத்தியில் டாடா குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் நேருக்கு நேர் மோத இருக்கிறது. சோலார் உற்பத்தி ஆலையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பெரும்பாலான ஊழியர்கள் உள்ளூர் பகுதிகளை சேர்ந்த பெண்களாக இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் நெல்லையின் சோலார் ஆலை செயல்பட தொடங்கும் என தெரிகிறது. டாடா பவர் நிறுவனம் ஏற்கனவே பெங்களூருவில் 500 மெகாவாட் திறன் கொண்ட சோலார் செல் மாடியூல் உற்பத்தி ஆலையை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

The post நெல்லையில் ரூ.4,000 கோடியில் சூரிய மின்சக்தி ஆலை: டாடாவின் டி.பி. சோலார் லிமிடெட் நிறுவனம் தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Power Plant ,Paddy ,Tata ,TD GP Solar Limited ,Tirunelveli ,Tata Group ,Tirunelveli district ,Tata's TD GP Solar Ltd. ,Dinakaran ,
× RELATED நிலவில் அணு மின் நிலையம் இந்தியா-சீனா இணைந்து செயல்பட விருப்பம்!!