×

மருந்தாகும் மலர்கள்

ஆவாரம் பூவோடு பாசிப்பயறைச் சேர்த்து அரைத்து தோலில் தேய்த்து குளித்தால் தோலில் நமைச்சல், அரிப்பு வராது. ஆவாரம் பூவை கஷாயமிட்டு குடித்தால் கல்லீரல் நோய், நீரிழிவு நோய் கட்டுப்படும். ஆவாரம் பூவை பாலில் வேகவைத்து சாப்பிட உடல் சூடு தணியும். 15 மல்லிப்பூக்களை அலசி கஷாயமாக்கி குடித்து வர படபடப்பு நீங்கும். நன்கு உறக்கம் வரும்.பெண்களுக்கு மார்பில் பால் கட்டி கொண்டு, மார்பில் வலி குறைய மல்லிகைப்பூவை அரைத்து மார்பில் கட்டினால் கட்டிகள் கரையும். வலியும் நீங்கும். பன்னீர் ரோஜா இதழ்களை நீரில் ஊறவைத்து கண்களைக் கழுவி வர கண் எரிச்சல், கண் சிவப்பு நீங்கும். ரோஜா இதழ்களை பச்சையாக மென்று தின்றால் வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆறும். மாதுளம் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுக் கடுப்பு, குருதி மூலம் குறையும். வெள்ளைத் தாமரைப்பூ ஐந்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிக்க இதயம் நரம்புகள் பலப்படும். பட படப்பு நீங்கும். உடல் சூடு நீங்கும். தும்பைப்பூவை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர நீர்க்கோர்வை, தலை பாரம் நீங்கும்.வாழைப்பூ சாறை மோருடன் சேர்த்து காலை-மாலை பருகினால் மாத விடாய் கால அதிக ரத்த போக்கு கட்டுப்படும்.
– எம். வசந்தா

வீக்கத்திற்கு மருந்தாகும் வேலிப் பருத்தி!

 குப்பை மேனி சாறுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து தடவினால் ‘வீக்கம்’ குணமாகும்.
 வெள்ளைப் பூண்டை உப்பு சேர்த்து இடித்து ‘சுளுக்கு’ உள்ள இடத்தில் தடவி வர குணம் பெறலாம்.
 வேலி பருத்தி சாறுடன் சுண்ணாம்பை கலந்து பூசிவந்தால் வீக்கம் தீரும்.
 புளிய இலையை அவித்து சூட்டோடு சூடாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் ‘சுளுக்கு’ குணமாகும்.
 நாமக் கட்டியை உமிழ்நீரில் குழைத்து தடவி வர அடிபட்ட வீக்கம் குறைந்து நலம் தரும்.
– செல்வி. ஜெயராணி

The post மருந்தாகும் மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Avaram ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...