×

காவிரி பிரச்சனையில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றம்தான்… கர்நாடக அரசின் எதிர்ப்பை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: காவிரி பிரச்சனையில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவதுதான் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாடு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து நேற்று டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி அவசர கூட்டம் சித்தராமையா தலைமையில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில், காவிரி பிரச்சனையில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவதுதான். காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும்போது கர்நாடகாவின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும். 21-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கின் முடிவை தெரிந்து கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவது பற்றி முடிவு எடுக்கப்படும். காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு கர்நாடக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு ஒவ்வொரு அங்குலமும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது; அதை தமிழ்நாடு அரசு முறியடிக்கும். தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் அதை அரசு எடுக்கும். என்று கூறியுள்ளார்.

The post காவிரி பிரச்சனையில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றம்தான்… கர்நாடக அரசின் எதிர்ப்பை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,Karnataka ,Supreme Court ,Minister ,Duraymurugan ,Chennai ,Water Resources ,Thuraymurugan ,Kaviri ,Cavieri ,Caviri ,Karnataka Government ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...