
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற, சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 1,06,50,000 பெண்கள் ஆவார்கள். இவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல், மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 3 லட்சம் அரசு ஊழியர்கள் என்று அரசு அதிகாரிகள் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே முறையாக விதிமுறைகளை அரசு வெளியிட்டு இருந்த போதும் 3 லட்சம் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதனால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவலும் அனுப்பப்பட்டுள்ளது. ரூ.1 அனுப்பி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதும் குறித்தும் சோதனை செய்யப்படும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தகவலும் ஒரு சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடக்கம்..!! appeared first on Dinakaran.