×

திருப்பதி மலைப்பாதையில் மேலும் 5 சிறுத்தைகள் நடமாட்டம்: பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முதன்மை வன பாதுகாவலர் பேட்டி

ஆந்திரா: திருப்பதி மலைப்பாதையில் மேலும் 5 சிறுத்தைகள் சுற்றித்திரியும் நிலையில் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதன்மை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு கடந்த ஜூன் மாதம் குடும்பத்துடன் பாதயாத்திரை சென்ற கெளசிக் என்ற சிறுவனை சிறுத்தை தாக்கியது. அருகில் இருந்தவர்கள் விரட்டியதால் அச்சிறுவன் காயங்களுடன் உயிர்தப்பினார்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நெல்லூரை லக்சிதா என்ற சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். இதற்கிடையில் வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டதில் 5 சிறுத்தைகள் சிக்கினர். இந்நிலையில், திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதன்மை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி திருப்பதி மலைப்பாதையில் மேலும் 5 சிறுத்தை சுற்றி திரிவதாக தெரிவித்தார்.

இருப்பினும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதால் பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார். திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை 330 கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். சிறுமி லக்சிதாவை தாக்கி கொன்ற சிறுத்தை விரைவில் சிக்கும் என்ற நம்பிக்கை தெரிவித்த மதுசூதன் அதுவரை தங்கள் பணி ஓயாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

The post திருப்பதி மலைப்பாதையில் மேலும் 5 சிறுத்தைகள் நடமாட்டம்: பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முதன்மை வன பாதுகாவலர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tirupati hillside ,Andhra Pradesh ,Tirupati ,AP ,Tirupati Mountains ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி