×

கோழிக்கோட்டை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு அறிகுறி; கண்காணிப்பு தீவிரம்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 2 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அவர்களுக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், புனேவில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு ரத்த மாதிரியானது அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று இரவு வெளியான நிலையில், இருவரும் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

நிஃபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து கேரளாவில் தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் 42 வார்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் மேலும் 2 பேர் உள்பட இதுவரை 4 பேருக்கு நிஃபா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கோழிக்கோட்டை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டுள்ளது.

நிஃபா வைரஸ் அறிகுறி உள்ள நபரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், வங்கிகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறைந்த ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

The post கோழிக்கோட்டை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு அறிகுறி; கண்காணிப்பு தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Kozhikotta ,Kozhokode District ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...