×

சிறுதானியம் விழிப்புணர்வு பேரணி

 

போடி, செப். 13: தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன் ஆகியோர் உத்தரவின் பேரில் போடி உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல் நிலைப் பள்ளிகளில் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். போடி ஜ.கா.நி மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர் பேரணியும் நடத்தப்பட்டது. இதில் பள்ளி தலைவர் ராஜகோபால், செயலாளர் ரமேஷ், தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணி மற்றும் மாணவ, மாணவியர் பலரும் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதுபோல், போடி அருகே கோடாங்கிபட்டி பூரண வித்தியாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் கிருத்திகா செய்திருந்தார்.

The post சிறுதானியம் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : grain ,Bodi ,Theni ,District Collector ,Shajivana ,District Food Safety Officer ,Raghavan ,Small Grain Awareness Rally ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் போடி அருகே கொட்டடிகுடி...