×

போடிமெட்டு அருகே விபத்தில் காங்., பிரமுகர் பலி

போடி, செப். 13: போடி திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் அன்புமணி (25). இவர் போடி வட்டார காங்கிரஸ் இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.  இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது டூவீலரில் போடிமெட்டு அருகிலுள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பூப்பாறைக்கு சென்று விட்டு ஊர் திரும்பினார். தோண்டி மலை சாலையில் வந்தபோது எதிரே பஸ் மற்றும் லாரி வர, ஒதுங்கியபோது டூவீலர் தடுப்புச்சுவற்றை தாண்டி ஏலத்தோட்டத்திற்குள் விழுந்தது. இதில் அன்புமணி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போடிமெட்டு அருகே விபத்தில் காங்., பிரமுகர் பலி appeared first on Dinakaran.

Tags : Congress ,Podimetu ,Bodi ,Kannan ,Anbumani ,Bodi Thirumalapuram ,Bodimettu ,
× RELATED போடி அருகே குரங்கணி பிரிவில் சாலை...