×

மகளிர் குழு தலைவர்கள் கூட்டம்

 

சிவகங்கை, செப்.13: காஞ்சிரங்காலில் ஊராட்சி மன்ற அளவில் உள்ள மகளிர் குழுக்களின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. காஞ்சிரங்கால் தொடக்க கூட்டுறவு வங்கி செயலர் ராமசாமி முன்னிலை வகித்தார். தலைமை வகித்து திமுக மாவட்ட துணை செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து பேசியதாவது:திமுக ஆட்சியில் தற்போது 21மகளிர் குழுக்களின் கடன் ரூ.40லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 320 விவசாயிகளின் நகை அடமானக் கடன் ரூ.60லட்சம், 133 விவசாயிகளின் விவசாய கடன் ரூ.33லட்சம் கடன் ஆகியன தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள 70 விவசாயிகள் கால்நடைத்துறை பராமரிப்புக்கு வழங்கிய விவசாயக் கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தி கூட்டுறவு அமைப்பை பலப்படுத்தி உள்ளனர். தற்போது 43 மகளிர் குழுக்கள் கடன் பெற உள்ளனர். கடன் பெற்றவர்கள் உரிய காலத்தில் திருப்பி செலுத்தி கூட்டுறவு அமைப்பை வளர்ப்பதில் அக்கறையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இதில் 43மகளிர் குழுக்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

The post மகளிர் குழு தலைவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : group leaders ,Sivagangai ,Kanchirangal ,Kanjirangal Inauguration ,Women's Group Leaders' Meeting ,
× RELATED பள்ளியில் எமிஸ் பதிவுகளில் இருந்து...