×

குளத்தில் மூழ்கி மாணவர் பலி

 

வேடசந்தூர், செப். 13: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள நல்லமன்னார்கோட்டை ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் தெய்வக்குமார். இவரது மகன் குருபிரசாத் (11). இவர், நல்லமனார்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை குருபிரசாத் நல்லமனார்கோட்டையில் இருந்து மாரம்பாடிக்கு செல்லும் வழியில் உள்ள வேலாயிகுளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். குளத்தில் இறங்கி குளித்தபோது குருபிரசாத் கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக் கண்ட அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து உடலை மீட்டுள்ளனர். மேலும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் சிறுவனின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த எரியோடு காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து உயிரிழந்த சிறுவன் குரு பிரசாத்தின் தாயார் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post குளத்தில் மூழ்கி மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Deivakumar ,Nallamannarkot Othapatti ,Eriodu, Dindigul District ,
× RELATED வேடசந்தூர் அருகே பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை