×

தன்னார்வ அமைப்பின் மூலம் அளிக்கப்படும் சிறப்பு திறன் குழந்தைகளுக்கான பேச்சு பயிற்சி, சிகிச்சை: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை: தன்னார்வ அமைப்பின் மூலம் வழங்கப்படும் சிறப்பு திறன் குழந்தைகளுக்கான சிகிச்சை குறித்து கண்ணகி நகரில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர் நகர்ப்புற சமுதாய நல மையத்தில் வர்ஷினி இல்லம் டிரஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் சிறப்புத் திறன் குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சி மற்றும் உடல் இயக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் நடவடிக்கைகளை, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

இந்த சிகிச்சைகளுக்காக அதிநவீன உபகரணங்கள் ரூ.35 லட்சம் மதிப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கண்ணகி நகரில் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளிக்கு வர்ஷினி இல்லம் டிரஸ்ட் மூலம் 1.86 லட்சம் மதிப்பில் பை மற்றும் மேஜைகள் வழங்கப்பட்டதை அவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கரியாலி, சபிதா, பொது சுகாதாரக்குழுத் தலைவர் கோ.சாந்தகுமாரி,ஐஓசி நிறுவன செயல் இயக்குநர் வி.எஸ்.அசோகன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன பிரதிநிதி சரவணன், மாநகர மருத்துவ அலுவலர் பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தன்னார்வ அமைப்பின் மூலம் அளிக்கப்படும் சிறப்பு திறன் குழந்தைகளுக்கான பேச்சு பயிற்சி, சிகிச்சை: மாநகராட்சி ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Commissioner ,J. Radhakrishnan ,Kannagi Nagar ,
× RELATED திருவேற்காடு நகராட்சியில் தூய்மை...