×

தோட்டக்கலை அதிகாரி தகவல் திருத்துறைப்பூண்டியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்

திருத்துறைப்பூண்டி, செப். 13: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் 4 பிரிவுகளாக நடைபெற்றது. 10 ஒன்றியங்களில் மண்டல அளவில் தேர்வு பெற்றவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்ட விளையாட்டு உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், அறிவழகன், சாய்ராம் பள்ளியின் முதல்வர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெற்ற போட்டியில் உடற்கல்வி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த 24 மாணவர்கள் சென்னையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

The post தோட்டக்கலை அதிகாரி தகவல் திருத்துறைப்பூண்டியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Horticulture ,Information District ,Thiruthurapundi ,Thirutharapoondi ,Sairam Matriculation Higher Secondary School ,Thiruvarur District ,Thiruthurapoondi ,Officer Information District ,
× RELATED வேளாண்மை, தோட்டக்கலை துறையில் உதவி...