திருத்துறைப்பூண்டி, செப். 13: திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்கு இவ்வாண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாடி தோட்டத் தளை மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பில் உள்ளது என திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில். ஒவ்வொரு ஆண்டும் மாடித்தோட்ட தளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அது போன்று இவ்வாண்டும் இத்திட்டத்தின் கீழ் மாடி தோட்ட தளை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாடி தோட்ட தளையில் 6 வளர்ப்பு பை, 6 தென்னை நாற்கழிவு கட்டிகள், வேப்ப எண்ணெய் 100 மில்லி, 6 வகையான விதைத்தளைகள், அசோஸ்பைரில்லம் 300 கிராம், பாஸ்போ பாக்டீரியா 300 கிராம் மற்றும் டிரைகோர்மா விரிடி 200 கிராம் ஆகியவை அடங்கியதாகும். இதன் மொத்த விலை ரூ.900 ல் மானியம் ரூ.450 நீங்கலாக ரூ. 450 மற்றும் ஒரு ஆதார் நகல் செலுத்தி மாடி தோட்ட தளையிணை திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்று பயன்பெறலாம் என்றார். மேலும் tnhortnet என்ற இணையத்தின் மூலமும் பதிவு செய்து அலுவலகத்தில் மாடி தோட்டத்தளையினை பெற்று பயன் பெறலாம். மேலும் சந்தேகங்களுக்கு திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை அலுவலர் சூரியா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அறிவழகன் 6379216779, புலவேந்திரன் 8526610441, கலியமூர்த்தி 8754986452 ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார்.
The post திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் மானியத்தில் மாடி தோட்டம் அமைக்கலாம் appeared first on Dinakaran.