×

தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர், செப். 13: தஞ்சாவூர் கூட்டுறவு காலனி தொடக்கப்பள்ளியில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் கூட்டுறவு காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தஞ்சாவூர் மேக்சிவிஷன் கண் மருத்துவமனை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கண் பரிசோதனை மருத்துவர் சிவா விக்னேஷ் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மருத்துவமனை துணை மேலாளர் கைலஸ்வர லோகநாதன் செய்திருந்தார். இம்முகாமில் பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Cooperative ,Colony Primary ,School ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி