சென்னை: தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, 355 டன் ரேஷன்அரிசி, 203 காஸ் சிலிண்டர்கள், 900 கிலோ கோதுமை, 1,235 கிலோ துவரம் பருப்பு, 15 லிட்டர் மண்ணெண்ணெய், 100 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 155 வாகனங்களும் கைப்பற்றப்பட்டது.இதுதொடர்பாக 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post 355.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 735 பேர் கைது appeared first on Dinakaran.
