×

16ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 16ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என சென்னை கலெக்டர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 100 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் சென்னை மாவட்டத்தின் இரண்டாவது மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி சனிக்கிழமை அன்று மாதவரத்தில் அமைந்துள்ள ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர்வால் – அகர்சன் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 15000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம் முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ, தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம்.

இம் முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.இம் முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.மேலும், இம் முகாம் தொடர்பான விவரங்களுக்கு சென்னை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 044-24615160 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது pjpsanthome@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 16ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,16th Employment Camp ,Dinakaran ,
× RELATED சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால்...