×

சென்னை, அரக்கோணம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணி இன்று 10 ரயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை, அரக்கோணம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணி காரணமாக இன்று 10 ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, அரக்கோணம் ரயில்வே யார்டில், இன்று காலை 10 மணி முதல் 1.30 மணி வரை மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், 10 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 8.20, 9.10, 11 மணிக்கு அரக்கோணத்திற்கு இயக்கப்படும் ரயில்கள், சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 10, 11.15 மணி, மதியம் 12 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், திருத்தணியில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 10.15 மணி, மதியம் 12.35 மணிக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. காலை 8.20, 11 மணிக்கு சென்ட்ரலில் இருந்து கடம்பத்துாருக்கும், காலை 9.10, 10 மணிக்கு சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கும், இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல காலை 10.25, 11.35, மதியம் 1.25 மணிக்கு கடம்பத்தூர் – சென்ட்ரல், காலை 11.10, மதியம் 12.35 மணிக்கு திருவள்ளூர் – சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில் சென்ட்ரல் அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது, இதற்கு பதிலாக காலை 9.50 மணிக்கு சென்ட்ரல் – கடம்பத்துார் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

The post சென்னை, அரக்கோணம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணி இன்று 10 ரயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Arakkonam railway ,Chennai ,Southern Railway ,Arakkonam Railway Yard ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...