×

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.2024ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை, ஜன.15ம் தேதி பொங்கல் பண்டிகை, 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஜன.13ம் தேதி சனிக்கிழமை முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு விடுமுறையாக வருகிறது. எனவே, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக விரைவு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்.13ம் தேதி) முதல் தொடங்குகிறது.

விரைவு ரயில்களில் பயணிக்க 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக ஜன.11ம் தேதி ரயிலில் பயணம் செய்ய இன்றும், ஜனவரி 12ம் தேதிக்கு நாளை மறுநாள், ஜனவரி 13ம் தேதி பயணிக்க வரும்15ம் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். பொங்கலுக்கு முந்தைய நாள், அதாவது ஜன.14ம் தேதி பயணிக்க செப்.16ம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும். இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர்களிலோ முன்பதிவு செய்யலாம்.

The post பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Bongal Festival ,Southern Railway ,Chennai ,Dinakaraan ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...