×

தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 9ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.44,080க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் (11ம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,515க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44120க்கும் விற்கப்பட்டது.

நேற்றும் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,520க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,160க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. தங்கம் விலை சிறிது, சிறிதாக அதிகரித்து வருவது நகை வாங்குவோருக்கு சிறிது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...