
விராலிமலை, செப்.13: அன்னவாசல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து பொதுமக்களுக்கும் உரிய சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவத்துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான கருவிகளை அரசு மருத்துவ மனையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், 24 மணி நேரம் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மருத்துவமனையில் பணிபுரிய வருகை தருவது குறித்தும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை, சிகிச்சை முறைகள் குறித்தும், நாள்தோறும் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கைகள் குறித்து மருத்துவ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
The post அன்னவாசல் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு: மருத்துவ சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார் appeared first on Dinakaran.