×

தென்காசியில் வளர்ச்சி திட்ட பணி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு

தென்காசி, செப்.13: தென்காசியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். தென்காசி நகராட்சி பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் மட்கும் குப்பை மட்காத குப்பைகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் அண்ணா நகரில் உள்ள நுண்ணுரகுடிலில் பராமரிக்கப்பட்டு சிறப்பாக உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே வளாகத்தில் சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதனை நேற்று மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து உழவர் சந்தை பின்புறம் உள்ள சிறுவர் பூங்காவையும் பார்வையிட்டார். மேலும் தேசிய நகர்ப்புற நல குழுமம் திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் மலையான் தெருவில் நலமையம் கட்டும் பணிகளையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பில் தென்காசி நகராட்சி எல்லைக்குட்பட்ட வண்ணான்குளம் மேம்பாட்டு பணிகளையும் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் சாதிர், ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஹசீனா, உதவி பொறியாளர் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், ஆய்வாளர் ஈஸ்வரன், திமுக நகர பொருளாளர் ஷேக்பரீத் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post தென்காசியில் வளர்ச்சி திட்ட பணி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Collector ,Durai Ravichandran ,Dinakaran ,
× RELATED தென்காசி அருகே விநோதமான வகையில்...