×

மாணவர் ேசர்க்கை இன்று துவக்கம் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

நெல்லை, செப். 13: நெல்லை மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் சங்கரன் மற்றும் நெல்லை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் கணேச சேதுராமலிங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை என்ஜிஓ ‘பி’ காலனி உதயாநகரில் அமைந்துள்ள மேடை தளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2023-24ம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெற மாணவர் சேர்க்கை இன்று (13ம் தேதி) முதல் செப்.22ம் தேதி வரை நடக்கிறது. பயிற்சியில் சேருவதற்கு 1.8.2023 அன்று குறைந்தபட்சம் 17வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

மாணவர் சேர்க்கைக்கான குறைந்த கல்வித் தகுதி 12வது வகுப்பு தேர்ச்சி ஆகும். 10, பிளஸ்2 கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற இளங்கலை பட்டதாரிகள், 10ம் வகுப்பு, மூன்றாண்டு பட்டயப்படிப்பு, பிறகு பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள். பயிற்சிக்கான விண்ணப்ப கட்டணம் ₹100 மற்றும் பயிற்சி கட்டணம் ₹18,750 ஆகும். கட்டணம் இணையவழி செலுத்த வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான இணையதள முகவரி HYPERLINK “http://www.tncuicm.com/”www.tncuicm.com. இன்று (13ம் தேதி) முதல் 22ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்படுவர். பயிற்சிக்கான பாடங்கள், பயிற்சி காலம் மற்றும் இதர விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மாணவர் ேசர்க்கை இன்று துவக்கம் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Nellie ,Nellai District Cooperative Management Training Institute ,Principal ,Sankaran ,Nellai District Cooperative ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...