×

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ரதயாத்திரை

நாகப்பட்டினம்,செப்.13: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் இருந்து ரதயாத்திரை புறப்பட்டது. மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ., நாகைமாலி ரதயாத்திரையை தொடங்கி வைத்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 5ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ரதயாத்திரை நேற்று நாகப்பட்டினம் அவுரித்திடலை வந்தடைந்தது. அங்கு கோரிக்கையை வலியுறுத்தி பேசிய பின்னர் மயிலாடுதுறை வழியாக அக்டோபர் மாதம் 5ம் தேதி டெல்லியை சென்றடையும் வகையில் ரதயாத்திரை தொடங்கி வைக்கப்பட்டது.

The post தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ரதயாத்திரை appeared first on Dinakaran.

Tags : Primary School Teacher Alliance Rathayatrai ,Nagapattinam ,Tamil Nadu Primary School Teachers Alliance ,Nagapattinam Aurithidal ,Primary School Teachers Alliance Rathayatrai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்