×

எட்டயபுரம் அருகே கார் மீது லாரி மோதி வாலிபர் பலி

எட்டயபுரம், செப்.13: வைகுண்டம் அருகேயுள்ள விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர் நேற்று முன்தினம் பரமக்குடியில் நடந்த இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி சென்றனர். எட்டயபுரம் அருகே காவல்நிலையம் அடுத்து மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது திருச்சியிலிருந்து திருச்செந்தூர் சென்ற லாரி மோதியதில் காரின் ஓரத்தில் நின்ற வைகுண்டம் அருகேயுள்ள விட்டிலாபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் அழகுராஜன் (21) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post எட்டயபுரம் அருகே கார் மீது லாரி மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Ettayapuram ,Vittilapuram ,Vaikundam ,Emmanuel Sekaranar ,Paramakkudy ,
× RELATED மீனாட்சிபுரத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம்