×

உயிருக்கு போராடிய எறும்புத்தின்னி மீட்பு

ஊத்தங்கரை, செப்.13: ஊத்தங்கரை மின்வாரிய அலுவலகம் எதிரே, சாலையோரம் எறும்பு தின்னி ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் பாபு, இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயமைப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த எறும்பு தின்னியை மீட்டனர். பின்னர், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் எறும்பு தின்னிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதை திப்பம்பட்டி காப்புக்காடு பகுதியில் உயிருடன் விட்டனர்.

The post உயிருக்கு போராடிய எறும்புத்தின்னி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,Uthankarai Power Board ,Dinakaran ,
× RELATED பெட்டிஷன் மேளாவில் 16 மனுக்களுக்கு தீர்வு