
- பெங்களூரு
- நாகர்கோவில்
- தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம்
- ஜோலார்பேட்டை
- கே.எஸ்.ஆர் பெங்களூரு
- தின மலர்
நாகர்கோவில், செப்.13: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு: ஜோலார்பேட்டை- கேஎஸ்ஆர் பெங்களூரு பிரிவில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் இவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்: 16525 கன்னியாகுமரி – கேஎஸ்ஆர் பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 24ம் தேதி புறப்படுவது 1 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக ஓடும். ரயில் எண்: 16526 கேஎஸ்ஆர் பெங்களூரு- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து செப்டம்பர் 12, 14, 21, 24 தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்படுவது எஸ்எம்விடி பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், பையப்பனஹள்ளி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர் மற்றும் சேலம் வழியாக செல்லும். வழக்கமாக செல்லும் கிருஷ்ணராஜபுரம், வைட்பீல்டு, மேலூர், பங்கர்பெட், குப்பம் மற்றும் திருப்பத்தூர் நிலையங்கள் செல்லாது.
The post பெங்களூரு ரயில் போக்குவரத்தில் மாற்றம் appeared first on Dinakaran.