×

கீழடி கொந்தகையில் முதுமக்கள் தாழிகளை திறக்கும் பணி துவக்கம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்.6ம் தேதி தொடங்கின. கீழடியில் இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டு 183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகையில் நடந்த மூன்று கட்ட அகழாய்வில் 153 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்த இடத்தின் அருகிலேயே 4ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

கொந்தகையில் மூன்று நிலைகளில் உள்ள 24 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. சிறியதும், பெரியதுமான இந்த தாழிகளில் உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக தாழிகளின் உயரம், அகலம் உள்ளிட்டவைகள் கணக்கிடப்பட்டு வரைபடங்களாக தயாரிக்கப்பட்டன. தொடர்ந்து முதுமக்கள் தாழிகளை திறக்கும் பணிகளில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சில தாழிகள் திறக்கப்பட்டு அதில் உள்ள எலும்புகள், கருவிகள், நெல்மணிகள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.

The post கீழடி கொந்தகையில் முதுமக்கள் தாழிகளை திறக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Keezhadi Kontakhai ,Tiruppuvanam ,Department of Tamil Nadu Archeology ,Keezhadi ,Sivagangai district ,
× RELATED திருப்புவனம் பேரூராட்சியில் தேர்தலில் 8 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லை