×

நாகப்பட்டினம் அருகே பட்டாசு ஆலையில் விபத்து உரிமையாளர் பரிதாப பலி: 3 பேர் படுகாயம்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிற்சாலை உரிமையாளர் தலைசிதறி பலியானார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியில் ஆஞ்சனேயா என்ற பெயரில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 5 இடங்களில் பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று மாலை தொழிலாளர்கள் வெடி தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென உராய்வு ஏற்பட்டு பயங்கரமாக வெடித்து சிதறின.

இதனால் 2 கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் தொழிற்சாலை உரிமையாளர் மணி (65) தூக்கி வீசப்பட்டு தலை சிதறி உயிரிழந்தார். ஆயக்காரன்புலத்தை சேர்ந்த மேரிசித்ரா (35), கலாவதி (35), தூத்துகுடியை சேர்ந்த கண்ணன் (34) ஆகிய 3 பேரும் பலத்த காயத்துடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வேதாரண்யம் மற்றும் வாய்மேடு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.

The post நாகப்பட்டினம் அருகே பட்டாசு ஆலையில் விபத்து உரிமையாளர் பரிதாப பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Firecracker ,accident ,Nagapattinam ,Vedaranyam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் எவ்வளவு...