×

பெங்களூருவில் தமிழ்நாடு அரசு பஸ் மீது கல்வீச்சு: மர்ம நபர்கள் அட்டகாசம்

பெங்களூரு: தமிழ்நாடு அரசு பேருந்து மீது பெங்களூருவில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் பெங்களூரு மாநகரின் மைசூரு சாலையில் உள்ள சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து சாம்ராஜ்பேட்டை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பஸ்ஸில் கண்ணாடி உடைந்துள்ளது.

இது குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் குணசேகரன், சாம்ராஜ் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் யாரும் இல்லாத காரணத்தினால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது. என்ன காரணத்திற்காக பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post பெங்களூருவில் தமிழ்நாடு அரசு பஸ் மீது கல்வீச்சு: மர்ம நபர்கள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Bengaluru ,Tamil Nadu… ,
× RELATED எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய்...