×

உ.பி. முன்னாள் டிஜிபி மீது வழக்கு

ஜான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014 முதல் 2015ம் ஆண்டு வரை காவல்துறை இயக்குனர் ஜெனரலாக பணியாற்றியவர் ஜக்மோகன் யாதவ். இந்நிலையில் ஜக்மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தார்ஹாட்டி கிராமத்தில் உள்ள பல்வேறு பொது நிலங்களை அபகரித்தாக அந்த கிராம மக்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணைக்காக நேற்று முன்தினம் கிராமத்துக்கு சென்றனர். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த ஜக்மோகன் யாதவ் கிராம தலைவர் சந்திரேஷ் குப்தாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர அடித்து மிரட்டல் விடுத்தார். போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ஜக்மோகன் யாதவுக்கு எதிராக புதிய புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post உ.பி. முன்னாள் டிஜிபி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : DGP ,Jaunpur ,Jagmohan Yadav ,Director General of ,Uttar Pradesh ,U.P. ,Dinakaran ,
× RELATED சென்னையில் பணியாற்றிய 3 உதவி...