
ஆம் ஆத்மியில் இருந்து விலகிய குஜராத் பழங்குடியின தலைவர் அர்ஜுன் ரத்வா காங்கிரசில் இணைந்தார்அகமதாபாத்: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய அர்ஜுன் ரத்வா நேற்று காங்கிரசில் இணைந்தார். குஜராத் மாநிலம் சோட்டாடேபூரை சேர்ந்த சமூக ஆர்வலரும், பழங்குடியின தலைவருமான அர்ஜுன் ரத்வா(50) கடந்த 2013ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இவர், “குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்பான விவகாரங்களில் முடிவுகளை எடுப்பதில் கட்சியின் தேசிய தலைமை தன்னை போன்ற உள்ளூர் தலைவர்களை கலந்தாலோசனை செய்வதில்லை.
இதனால் தான் சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் தோல்வி அடைந்தோம்” என்று கூறி கடந்த 5ம் தேதி ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அர்ஜுன் ரத்வா நேற்று காங்கிரசில் இணைந்தார். அவரை காங்கிரசின் குஜராத் பிரிவு தலைவர் சக்திசிங் கோஹில் வரவேற்றார். காங்கிரசில் இணைந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் ரத்வா, “நான் ஆம் ஆத்மியில் இருந்தாலும், காங்கிரசில் இருந்தாலும் என் ஒரே நோக்கம் பாஜவை எதிர்ப்பதுதான். 2024 மக்களவை தேர்தலில் நாட்டில் மாற்றம் நிகழும். அந்த மாற்றம் குஜராத்திலும் ஏற்படும்” இவ்வாறு கூறினார்.
The post ஆம் ஆத்மியில் இருந்து விலகிய குஜராத் பழங்குடியின தலைவர் அர்ஜுன் ரத்வா காங்கிரசில் இணைந்தார் appeared first on Dinakaran.