×

திரிணாமுல் எம்.பியிடம் அமலாக்கத்துறை விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் பஷிரத் தொகுதி எம்.பியாக இருப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை நுஸ்ரத் ஜகான்(33) . இவர், கொல்கத்தாவில் உள்ள நியூ டவுன் பகுதியில், மூத்த குடிமக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பதாக கூறி ஏமாற்றி விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்காக கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று அவர் ஆஜரானார். விசாரணையின்போது, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அவர், அந்த நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து 2017ம் ஆண்டே விலகி விட்டதாக தெரிவித்தார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடந்தது.

The post திரிணாமுல் எம்.பியிடம் அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Trinamool ,Kolkata ,Nusrat Jagan ,Trinamool Congress ,West Bengal ,Bashirat ,
× RELATED பாஜகவின் கூட்டாளிகள்தான் அமலாக்கத்துறை: எம்.பி ஜோதிமணி