×

புழல் சிறைக்குள் கஞ்சா, செல்போன் பறிமுதல்

புழல்: புழல் சிறைக்குள் கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. புழல் விசாரணை சிறையில், நேற்று முன்தினம் இரவு பந்து வடிவிலான ஒரு பொருள் கிடந்தது. அதை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் எடுத்து பிரித்து பார்த்தார். அதற்குள், 200 கிராம் கஞ்சா மற்றும் 3 செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறைக்கு எதிரே உள்ள ஜிஎன்டி சாலை பகுதியில் இருந்து, கஞ்சா, செல்போனை வீசியது யார், யாருக்காக வீசப்பட்டது என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புழல் சிறைக்குள் கஞ்சா, செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ganja ,Puzhal Jail ,Puzhal ,
× RELATED புழல் சிறையில் சிறை காவலர்கள்...